Skip to main content

Advertisement

General

உங்களுக்காக ஆஸ்ட்ரோ கொண்டு வந்திருக்கும் புதிய பயிற்சி!

மலேசியர்களுக்குச் சேவையாற்றி 30 ஆண்டுகளைக் கொண்டாடும் இவ்வேளையில், வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் நெருங்கியக் குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரத்தியேகமான ஒரு தொழில்முறைப் பயிற்சி வாய்ப்பான Astro Family Internship Programme திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் ஆஸ்ட்ரோ நிறுவனம் பெருமைக் கொள்கிறது.

மலேசியாவின் முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனத்தில், ஊடகம், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் ஆஸ்ட்ரோ நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்தத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் இணைந்துப் பணியாற்றுவதன் மூலம், களப்பணியிலானத் திரைக்குப் பின்னாலுள்ள நடைமுறை அனுபவத்தைப் பெறும் வாய்ப்பை Astro Family Internship Programme இளைஞர்களுக்கு வழங்குகிறது.

Advertisement

ஆஸ்ட்ரோவின் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி கிறிஸ்டின் லிம் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளாக, மலேசியக் குடும்பங்கள் ஆஸ்ட்ரோவைத் தங்கள் இல்லங்களில் வரவேற்று, எங்களைத் தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளன. இந்த முக்கிய மைல்கல்லைக் கொண்டாடும் வேளையில், அடுத்த தலைமுறைக்கு அர்த்தமுள்ள ஒரு வாய்ப்பை உருவாக்குவதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றித் தெரிவிக்க விரும்புகிறோம்.

இளம் பருவத்தினர் மதிப்புமிக்க நடைமுறை அனுபவத்தைப் பெறவும், தங்கள் ஆர்வங்களைக் கண்டறியவும், பணிச்சூழலில் அடியெடுத்து வைப்பதற்கானத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இத்திட்டம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இது எங்கள் வாடிக்கையாளர்கள் மீதான நன்றியுணர்வின் வெளிப்பாடாகவும், அதே வேளையில் அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்ளவும், வளர்ச்சியடையவும், தங்களுக்கு முன்னால் உள்ள வாய்ப்புகளைக் கண்டறியவும் ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைகிறது.”

பிப்ரவரி மற்றும் ஜூலை 2027-க்கு இடைப்பட்டக் காலத்தில் வழங்கப்படும் இந்த மூன்று மாத தொழில்முறைப் பயிற்சித் திட்டத்தின் மூலம், பயிற்சியாளர்கள் உள்ளடக்கம், சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பு, மென்பொருள் பொறியியல், தரவு மற்றும் பகுப்பாய்வு போன்றப் பல்வேறு வணிகத் துறைகளிலும் நிதி, மனித வளம், சட்டம் மற்றும் கொள்முதல் போன்ற நிறுவனச் செயல்பாட்டுத் துறைகளிலும் நேரடிப் பணி அனுபவத்தைப் பெறுவார்கள்.

உள்ளடக்கம் மற்றும் ஊடகத் துறைக் குறித்தும், பொழுதுபோக்கு, விளையாட்டு, செய்திகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் வாயிலாக அது எவ்வாறு லட்சக்கணக்கான மலேசியர்களுடன் இணைகிறது என்பது குறித்தும் விரிவானப் புரிதலைப் பயிற்சியாளர்கள் பெறுவார்கள். நடைமுறைத் திறன்களை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், இளம் திறமையாளர்கள் தங்கள் ஆர்வங்களை ஆராயவும், சாத்தியமானத் தொழில் பாதைகளைக் கண்டறியவும், எதிர்காலப் பணிச்சூழலுக்குத் தேவையான மதிப்புமிக்கத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Astro Family Internship Programme திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2026 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் பொருத்தப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் மதிப்பீடுச் செய்யப்படுவார்கள்; அதேவேளையில், தொழில்முறைப் பயிற்சிப் பணி இடங்கள் வணிகத் தேவைகளுக்கு உட்பட்டதாக அமையும்.

முழுமையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டக் கூடுதல் தகவல்களைப் பெறவும், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும் https://www.astro.com.my/careers/family-internship- programme என்ற அகப்பக்கத்தை அணுகவும்.