Skip to main content

Advertisement

'வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெறும்' - சென்னைக்கு 4 நாள் கனமழை எச்சரிக்கை

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது?
IMD

வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிக்கைப்படி, இன்று காலை 08:30 மணி நிலவரப்படி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 630 கிமீ தொலைவிலும் சென்னையில் இருந்து 840 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

"இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 அன்று தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மேலும் வலுவடைந்து, ஒரு புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது," என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 17-ஆம் தேதி மேற்கு-மத்திய வங்கக் கடலில் அது தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை அறிக்கை குறிப்பிடுகிறது. அதன்பிறகு, இது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நவம்பர் 19-ஆம் தேதி அன்று அதிதீவிர புயலாக உருவெடுக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அக்வான் எனப் பெயரிடப்படும். இந்தப் பெயரை இரான் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு என்ன எச்சரிக்கை?

வானிலை அறிக்கையின்படி,

  • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், நவம்பர் 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
  • நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது?
Getty Images
(கோப்புப் படம்)

சென்னைக்கு 4 நாள் கனமழை எச்சரிக்கை

இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சில வடக்கு மற்றும் கரையோர மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

17.11.2026: சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18.11.2026: சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19.11.2026: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20.11.2026: சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலை எப்படி இருந்தது?

தமிழ்நாட்டின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக, மதுரை விமான நிலையப் பகுதியில் 34.5°C பதிவானது. தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளில், திருத்தணியில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக 20.5°C பதிவானது.

தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில், உதகமண்டலத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக 9.2°C பதிவானது," என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது?
Getty Images
(கோப்புப் படம்)

முன்னதாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நவம்பர் 17-ஆம் தேதி வரை அந்தமான் கடல் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் (நவம்பர் 17 வரை). - தென்கிழக்கு வங்கக் கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல நவம்பர் 15 முதல் 19 வரை தென்மேற்கு வங்கக் கடலுக்கும், நவம்பர் 16 முதல் 20 வரை மத்திய வங்கக் கடலுக்கும் நவம்பர் 19 முதல் 20 வரை வடமேற்கு வங்கக் கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை உருவாகும் புயலுக்கு என்ன பெயர்? புயல்களுக்குப் பெயர் வைப்பது யார்?

வங்கக்கடலில் நாளை உருவாகும் புயலுக்கு அக்வான் எனப் பெயரிடப்படுகிறது. இந்தப் பெயரை இரான் வழங்கியுள்ளது.

வங்கக்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்படுகிறது.

உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் வெப்பமண்டலப் புயல்கள் குழு இந்தப் பெயரிடும் நடைமுறையை ஒருங்கிணைக்கிறது.

இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகள் ஒவ்வொன்றும் தலா 13 பெயர்களைப் பரிந்துரைத்துள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து மொத்தம் 169 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

13 நாடுகள் பரிந்துரைத்த பெயர்களை ஆய்வு செய்து இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது வெப்பமண்டலப் புயல்கள் குழுவின் பணி. அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைப்படி, வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒதுக்கும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் உள்ளது. இதற்கான பணியை டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் மேற்கொள்கிறது.

பெயர்கள் எந்த வரிசையில் பயன்படுத்தப்படுகின்றன?

நாளை உருவாகும் புயலுக்கு என்ன பெயர்?  புயல்களுக்குப் பெயர் வைப்பது யார்?
RSMC

13 நாடுகளும் பரிந்துரைத்த பெயர்கள், அந்த நாடுகளின் ஆங்கிலப் பெயர்களின் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டின் 13 பெயர்களும் தனித்தனி வரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை 13 நெடுவரிசைகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நெடுவரிசையிலும் வங்கதேசம் பரிந்துரைத்த பெயரில் தொடங்கி, ஏமன் பரிந்துரைத்த பெயர் வரை வரிசையாகப் பயன்படுத்தப்படும். ஒரு நெடுவரிசையில் உள்ள பெயர்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட பிறகு அடுத்த நெடுவரிசைக்குச் செல்லப்படும்.

உதாரணமாக, முதல் நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'நிசர்கா' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'கதி' என்ற பெயர் வருகிறது. அதற்குப் பிறகு இரான் பரிந்துரைத்த 'நிவார்', மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'புரேவி' எனத் தொடர்கிறது.

அடுத்தடுத்த புயல்களுக்குப் பெயரிடும் வரிசையிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போதைய பட்டியலின் மூன்றாவது நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'முரசு' இடம்பெற்றிருந்தது. எனவே, இந்தப் புயலுக்கு 'முரசு' என்ற பெயர் வந்ததற்குக் காரணம், பட்டியலில் அந்தப் பெயரின் முறை வந்திருப்பதுதான்.

புயல் எந்த நாட்டை நோக்கிச் செல்கிறது அல்லது எந்த நாட்டில் கரையைக் கடக்கிறது என்பதைப் பொறுத்து அதன் பெயர் தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக, இந்தியக் கடலோரப் பகுதிகளை நோக்கி வரும் புயலுக்கு இந்தியா பெயரிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பட்டியலில் அடுத்ததாக எந்த நாட்டின் பெயர் இடம்பெற்றுள்ளதோ, அந்த நாட்டின் பரிந்துரைக்கப்பட்ட பெயரே பயன்படுத்தப்படும்.

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் புயல் பெயர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படும். ஆனால், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒவ்வொரு பெயரும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர் மீண்டும் அந்தப் பட்டியலில் இடம் பெறாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு