Skip to main content

Advertisement

News

2027 ஜனவரி 1 முதல் இந்தியர்களுக்கு மலேசியா வர விசா கட்டாயம்!

புகைப்படம்: அலங்காரப் படம்

 

Advertisement

மலேசியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 டிசம்பர் 31ஆம் தேதியுடன் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லா நுழைவு சலுகை முடிவுக்கு வருகிறது.

மலேசியக் குடிநுழைவுத் துறையின் அறிவிப்பின்படி, 2027 ஜனவரி 1 முதல் மலேசியாவுக்குள் நுழைய விரும்பும் இந்தியக் குடிமக்கள் பயணத்திற்கு முன்பே, விசாவைப் பெற்றிருக்க வேண்டும். 

இதுவரை இந்தியர்கள் சுற்றுலா, சமூகச் சந்திப்பு, வணிகம் மற்றும் பயண இடைநிறுத்தம் போன்ற நோக்கங்களுக்காக 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியாவுக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், 2026 டிசம்பர் 1 முதல் மலேசியாவின் அதிகாரப்பூர்வ MyVISA இணையத்தளம் மூலம் விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2027 ஜனவரி மாதம் அல்லது அதற்குப் பிறகு மலேசியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியர்கள் முன்கூட்டியே விசாவுக்கு விண்ணப்பித்து, தேவையான பயண ஆவணங்களைத் தயாராக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு சலுகை 2023 டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தச் சலுகை 2026 டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

மூலம்: மலேசியக் குடிநுழைவுத் துறை