
மலேசியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஆஸ்ட்ரோ, இந்த ஆண்டுக்கான தீபாவளி விருந்துபசார நிகழ்வை ‘ஒன்றிணைந்து கொண்டாடுவோம்’ (Ondrinaindhu Kondaduvom) என்ற கருப்பொருளுடன் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாஸ்மின் சிக்னேச்சர் பால்ரூமில் கோலாகலமாக நடத்தியது.

இந்நிகழ்வில் ஆஸ்ட்ரோவின் தலைமை உள்ளடக்க அதிகாரி ஆக்னஸ் ரொசாரியோ மற்றும் இந்திய உள்ளடக்கப் பிரிவின் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் ராஜாராம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சிகள், இனிமையான இசைக்கருவி இசை நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் கலைஞர் பாலன் காஷின் சிறப்பு இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
மேலும், பிரபல பின்னணிப் பாடகி சைந்தவியின் வருகை நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்தது. அவரின் பங்கேற்பு இசை ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ஆஸ்ட்ரோ விண்மீன் ஒளிவழியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் முன்னோட்டங்களும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டன.
அவற்றில் ‘தீபாவளி கொண்டாட்டம்’ (Deepavali Kondattam) என்ற சிறப்பு இசை நிகழ்ச்சி, ‘சவாலைச் சமாளி’ (Savalai Samaali) மற்றும் ‘சஞ்சிகை தீபாவளி சிறப்பு’ (Sanjigai Deepavali Special) ஆகிய நிகழ்ச்சிகளும் அடங்கும். இதனுடன், ‘அடைக்கலம்’ (Adaikalam), ‘மாய ஓவியன்’ (Maya Oviyan) மற்றும் ‘காதல் அன்ஃபாலோ’ (Kadhal Unfollow) ஆகிய தொலைக்காட்சித் திரைப்படங்களின் முன்னோட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
‘ஒன்றிணைந்து கொண்டாடுவோம்’ என்ற கருப்பொருளின் மூலம் இனம், மொழி மற்றும் கலாசார வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் தீபாவளியின் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் ஆஸ்ட்ரோ எடுத்துரைத்தது.
பாரம்பரியக் கலைகள், இசை மற்றும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எனப் பல அம்சங்களை ஒருங்கிணைத்த இவ்விழா, தீபாவளிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
மூலம்: ஆஸ்ட்ரோ உலகம் (Astro Ulagam)