Skip to main content

Advertisement

Society & Culture

தனிப்பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளுக்கு இந்தியா பாதுகாப்பானதா? – இந்தியாவின் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்

புகைப்படம்: WION

Advertisement

 

இந்தியாவுக்கு தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து நிலவும் கருத்துகள் மற்றும் தவறான புரிதல்கள் தொடர்பாக, இந்தியாவின் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற WION Iconic Tourism Summit & Awards 2026 நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் சுற்றுலா தொடர்பாக சில சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு, ஒட்டுமொத்த நாட்டின் பயண அனுபவத்தைப் பற்றிய எதிர்மறையான பார்வையை உருவாக்குவதாகக் கூறினார். 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தனியாகப் பயணம் செய்யும் ஒரு பெண்ணுக்கு எதிராக நடைபெறும் ஒரு சம்பவம் கூட முக்கியமானது என்றும் அதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவின் சுற்றுலாத்துறையின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்துவதற்காக மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

குறிப்பாக, சில மாநிலங்களில் சுற்றுலா காவல்துறை மற்றும் தனிப்பட்ட சுற்றுலா காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு சம்பவம் நடந்தால், அதனைத் தொடர்ந்து ஊடகங்களில் பல மணி நேரம் தொடர்ந்து கவனம் செலுத்துவது இந்தியாவின் சுற்றுலாத்துறைக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இந்தியா தற்போது சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பயணிகளின் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தி வருகிறது.