Skip to main content

Advertisement

General

நவம்பர் 21 & 22 ஆகிய தேதிகளில் தேசிய மிருகக்காட்சிசாலையில் 3 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இலவச அனுமதி!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, மலேசிய தேசிய மிருகக்காட்சிசாலை நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சிறப்புக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு, 3 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

இலவச நுழைவுக்கான நிபந்தனைகள்:

- நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மிருகக்காட்சிசாலையில் அமைக்கப்படும் சிறப்பு நுழைவுச் சீட்டு கவுன்டரில் நேரடியாகச் சென்று இலவச அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

- சிறுவர்களின் அசல் அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

 

பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கான தகவல்கள்:

- பெரியவர்கள் தங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை நேரடியாகவோ அல்லது இணையம் மூலமாகவோ வாங்கிக்கொள்ளலாம்.

- தகுதியுடையவர்கள் தங்களின் பிறந்தநாள் இலவச நுழைவுச் சீட்டையும் பெற்றுக்கொள்ளலாம்.

- பிறந்தநாள் நுழைவுச் சீட்டை, பிறந்தநாள் தொடங்கி 30 நாட்களுக்குள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். பிறந்தநாளுக்கு முன்பாக அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது.

- பிறந்தநாள் நுழைவுச் சீட்டைப் பெறுவதற்கு நேரடியாக மிருகக்காட்சிசாலைக்குச் செல்ல வேண்டும்.

- இதற்காக அசல் அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நாளைக் கழிக்கத் தயாராகுங்கள்.

 

மூலம்: மலேசிய விலங்கியல் பூங்கா