Skip to main content

Advertisement

News

புத்ராஜெயாவில் RM1 கட்டணத்தில் புதிய ஓட்டுநரில்லா பேருந்து சேவை அறிமுகம்

புகைப்படம்: eMoovit (Instagram)

Advertisement

புத்ராஜெயாவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் புதிய தானியங்கி மின்சாரப் பேருந்து சேவை அக்டோபர் 7 முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

நடிப்புத்ரா பொதுப் பேருந்து சேவையின் கீழ் P113 வழித்தடத்தில் இயங்கும் இந்தப் பேருந்து, MRT Putrajaya Sentral முதல் Dataran Gemilang வரை பயணித்து, பின்னர் மீண்டும் MRT Putrajaya Sentral-க்கு திரும்பும்.

இந்தச் சேவை ஈமூவிட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. பேருந்து சுற்றுப்புறத்தை அடையாளம் கண்டு பாதுகாப்பாகப் பயணிக்க லைடார் (ஒளி கண்டறிதல் மற்றும் தொலைவு அளவீடு), ரேடார், கேமராக்கள் மற்றும் அல்ட்ராசோனிக் சென்சார்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

P113 வழித்தடத்தின் முக்கிய பேருந்து நிறுத்தங்கள்:

  • MRT Putrajaya Sentral

  • Kementerian Kewangan

  • Istana Kehakiman

  • Kementerian Belia & Sukan

  • Dataran Gemilang

  • Kompleks Perbadanan Putrajaya

பின்னர் பேருந்து மீண்டும் MRT Putrajaya Sentral-க்கு திரும்பும்.

புகைப்படம்: Perbadananputrajaya (Instagram)

பேருந்து புறப்படும் நேரங்கள்:

காலை: 7.15, 8.15, 9.15, 10.15

மாலை: 2.45, 3.45, 4.45, 5.45

இந்தச் சேவை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இயங்கும். வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் சேவை இருக்காது.

கட்டணம்:ஒரு வழிப் பயணத்திற்கு RM1 மட்டுமே!கட்டணத்தை விசா அல்லது மாஸ்டர்கார்டு பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலம் மட்டுமே பணமில்லா முறையில் செலுத்த முடியும்.

புத்ராஜெயாவில் பொதுப் போக்குவரத்தில் புதிய தொழில்நுட்ப அனுபவத்தை வழங்கும் இந்த தானியங்கி மின்சாரப் பேருந்து, பொதுமக்களுக்கு ஒரு புதிய பயண அனுபவமாக அமைய உள்ளது.