Skip to main content

Advertisement

Sports

சிவசங்கரியின் வெற்றியால் 6ஆவது தங்கத்தை எட்டிய மலேசியா

புகைப்படம்: Stadium Astro

 

Advertisement

மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, Aichi-Nagoya 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கான 6ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பெண்களுக்கான தனிநபர் ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங்கை எதிர்கொண்ட சிவசங்கரி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வெற்றியைத் தன்வசப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் மலேசியா தனது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 6 தங்கப் பதக்க இலக்கை எட்டியுள்ளது. 

மலேசிய ஸ்குவாஷ் அணிக்கும் இது சிறப்பான போட்டியாக அமைந்துள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் தனிநபர் பிரிவுகளில் முறையே எயின் யோவ் மற்றும் சிவசங்கரி தங்கம் வென்று, இரு பிரிவுகளிலும் மலேசியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிவசங்கரியின் இந்த வெற்றி, Aichi-Nagoya ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் பதக்க வேட்டையில் மேலும் ஒரு பெருமையான அத்தியாயமாக அமைந்துள்ளது.