
சுங்கைப்பட்டாணியில் உள்ள தாமான் கெளாடி ஆரம்பத் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில், “Sekolah Angkat Malaysia MADANI” மலேசியா மடானி ஆதரவுப் பள்ளித் திட்டத்தின் கீழ் RM100,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பள்ளியின் பல்நோக்கு விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Advertisement
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை மலேசிய இளையோர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், ஒய்.பி. டாக்டர். முகம்மது தௌபிக் பின் ஜொஹாரி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். செப்டம்பர் 28ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் நடைபெற்ற “Sekolah Angkat Malaysia MADANI” மலேசியா மடானி ஆதரவுப் பள்ளித் திட்டப் பணிகள் ஒப்படைப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

மேம்படுத்தப்படும் விளையாட்டு வசதிகள் மூலம் மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும், தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை ஊக்குவித்து, எதிர்காலத்தில் திறமையான இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், கெடா மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, “Sekolah Angkat Malaysia MADANI” மலேசியா மடானி ஆதரவுப் பள்ளித் திட்டத்தின் மூலம் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் திறன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வசதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், விளையாட்டுத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: kbsmalaysia (Instagram)